சிந்தாரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவில் பல்வேறு செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடைகள் உள்ளது.. இந்த தெரு மிகவும் குறுகிய தெரு.. தினமும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள மின்சார பெட்டி திறந்தும் அதன் வயர்கள் வெளியே தெரிந்தபடியும் உள்ளது. உயர் மின் வயரில் சரிவர டேப் சுற்றாமல் வாட்டர் கேனை சொருகி வைத்துள்ளனர். இதை பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் சரி செய்யவில்லை.. தற்போதைய மழை காலத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்வார்களா ??
சென்னை: தமிழகத்தில் களப்பணியாளர்களாக பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் சீமான் கூறினார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:- பெரும்பணி போற்றுதலுக்குரியது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது. அதிலிலுள்ள தார்மீகத்தை உணர்ந்து நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது. புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, களத்திலிறங்கி இரவு பகல் பாராது பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் பொறுப்புணர்வுமிக்கப் பெரும்பணியானது போற்றுதற்குரியதாகும். தமிழக அரசின் கடமை கொரோனா எனும்...
கருத்துகள்