24 மணி நேரம் விடாமல் மழை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் இந்த கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.பிரதீப் ஜான் எச்சரிக்கை ஏற்கனவே ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ததற்கே சென்னை வெள்ளக் காடாக மாறி மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஜான் சில முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாகவே தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணரான பிரதீப் ஜான் கணிப்பது சரியாக இருக்கும். எனவே இவரது இந்த கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
.நான் ஸ்டாப் மழை மோசமான விஷயம் என்னவென்றால், நவம்பர் 10ம் தேதி பிற்பகல் அல்லது இரவு முதல் நவம்பர் 11ம் தேதி மதியம் வரை தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 11ம் தேதி மாலை அல்லது இரவு முதல் மழை அளவு குறையத் தொடங்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், 10ம் தேதி பகல் முதல், 11ம் தேதி மாலை வரை மிகக்கடுமையான கண்காணிப்பு கடலூர் முதல் சென்னை வரையிலான பிராந்தியத்திற்கு தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மக்களே உஷார் ஏற்கனவே பெய்த மழையினால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் நாளை மதியத்திற்கு பிறகு இடைவிடாமல் மழை தொடரும் என்று பிரதீப் ஜான் தெரிவித்து இருப்பது சென்னைவாசிகளுக்கு சற்று கலக்கத்தை கொடுக்கக்கூடிய செய்திதான். எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை முக்கியம் என்பதை இந்த எச்சரிக்கை மூலமாக புரிந்து கொள்ள முடிகிறது. முதல்வர் ஆய்வு இதனிடையே, சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்க கூடிய மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை என்றார்.மேலும், இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும். வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
கருத்துகள்