சென்னை: கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் நவம்பர் 10ம் தேதியான நாளை பிற்பகல் முதல் அல்லது நாளை இரவு முதல் 11ம் தேதி பிற்பகல் வரை இடைவிடாத மழை கொட்டி தீர்க்கும் (Non Stop) என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்த காலகட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் இந்த கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதீப் ஜான் எச்சரிக்கை ஏற்கனவே ஒரே நாளில் 20 சென்டிமீட்டர் மழை பெய்ததற்கே சென்னை வெள்ளக் காடாக மாறி மிதந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் ஜான் சில முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாகவே தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணரான பிரதீப் ஜான் கணிப்பது சரியாக இருக்கும். எனவே இவரது இந்த கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது . நான் ஸ்டாப் மழை மோசமான விஷயம் எ...